WELCOME TO MY BLOG



I welcome all of you to my blog site

Monday, November 22, 2010

தமிழக அரசில் முழு ஓய்வூதியம் பெறும் கால முறையில் உள்ள குறைபாடு

தமிழக அரசில் முன்னாளில் 30 ஆண்டு கால பணி என்பது முழு ஓய்வூதியம் பெற தகுதியாக இருந்த போது, ஒரு அரசு ஊழியர் 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலே முழு ஓய்வு ஊதியம் பெற தகுதியுடையவர் ஆவார் என்ற விதி இருந்தது. பின்னர் முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டு காலப் பணி என்பதை 33 ஆண்டு காலம் என மாற்றப்பட்ட போது, 25 ஆண்டுகள் என்பதை 28 ஆண்டுகள் என மாற்றப்படவில்லை. பின்னர் 33 ஆண்டுகள் பணி என்பதை தமிழக அரசு 30 ஆண்டுகள் ஒரு அரசு ஊழியர் பணியாற்றினாலே முழு ஓய்வூதியம் பெறலாம் என மாற்றிய போது முன்னாளில் இருந்தவாறு 25 ஆண்டுகள் பணி ஆற்றி ஓய்வு பெற்றாலும் முழு ஓய்வூதியம் பெறலாம் என உத்திரவு பிறப்பிக்காமல் விட்டு விட்டது. மத்திய அரசில் ஒரு அரசு ஊழியர் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலே முழு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவராகிறார் என்று தற்போது விதி ஏற்படுத்தி உள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள் முன்னர் இருந்ததைப் போலவே 25 ஆண்டுகள் பணியாற்றினாலே முழு ஓய்வூதியம் பெறலாம் என தமிழக அரசு ஓய்வூதிய விதியை திருத்தி தமிழக அரசு ஊழியர்களின் குறையை போக்கிட வேண்டும்.

No comments: